"புரட்சி" என்ற சொல்லை நீங்கள் அடிக்கடி கேட்டிருப்பீர்கள். எனக்கு பிடித்ததொரு சொல்லாக நான் கருதுவது "புரட்சி"யைத் தான். வெறும் சொல்லாக மட்டுமில்லை, அதை செய்யவும் துணிந்து நிற்கும் பிள்ளையாக என்னை வளர்த்துக்கொள்ளவும் எப்போது அணியமாகவே உள்ளேன்.
உலகின் புரட்சிகளைப் புத்தகத்தில் மட்டும் படித்துவிட்டு வியந்துகொண்டு திரியும் வெற்று பகட்டுக்காரனாக மட்டும் இருப்பதில் எப்போதும் எனக்கு உடன்பாடில்லை. இளைய பிள்ளைகள், புரட்சியைப் படிப்பவர்களாக மட்டும் இல்லாமல் படைப்பவர்களாகவும் இருக்கவேண்டும். மக்கள் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் பங்கேற்பாளர்களாகவும் இருக்கவேண்டும்.
புரட்சி என்ற சொல்லுக்கு புரட்டிப்போடுவது என்று பொருள். இதுவரை நடக்கும் தவற்றைப் பொறுத்துக்கொள்ள வழியில்லாதபோது பாதிக்கப்பட்டவர்கள் தன்னெழுச்சியாக தடைகள் அனைத்தையும் புரட்டிப்போட முன்வருவது தான் புரட்சி! சரி! புரட்சியைப் பற்றி பலர் பலவற்றைக் கூறியுள்ளனர். அதை பார்க்கலாம்!!!
*====>அடிமைப்பட்ட இனத்தில் ஒரே காலத்தில் எல்லோர்க்கும் விடுதலைச் சிந்தனைகள் உருவாவதில்லை. புரட்சி முதலில் தனி மனிதனின் மனதிலிருந்து தோன்றுகிறது.
*====>புரட்சி எப்போது ஏற்படுகிறது? லெனின் அளிக்கும் விளக்கம் இது. "இதுவரை வாழ்ந்தது போல் இனி மேற்கொண்டு வாழ முடியாது என்ற முடிவுக்கு கோடானுகோடி மக்கள் வரும்பொழுது புரட்சிகள் வருகின்றன".
*====>புரட்சி என்ற வார்த்தையின் பொருள் என்ன என்று கேட்கப்பட்டபோது பகத் சிங் அளித்த விடை இது.புரட்சி என்பது ரத்த வெறிகொண்ட மோதலாகத்தான் இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தனிமனிதர்கள் வஞ்சம் தீர்த்துக்கொள்வதற்கு அதில் இடமில்லை. அது வெடிகுண்டுகள், துப்பாக்கிகள் மீதான வழிபாடல்ல. புரட்சி என்பதன்மூலம், வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்தச் சமூக அமைப்பு மாற்றியமைக்கப்படவேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம்.
பின்பு அவர் இப்படி சொல்கிறார்.
*===="வாழ வேண்டும் என்ற ஆசை இயற்கையானதே. அது என்னிடமும் உள்ளது. அதை நான் மறுக்க விரும்பவில்லை. ஆனால், அந்த ஆசை நிபந்தனைக்கு உட்பட்டது. ஒரு சிறைக் கைதியாகவோ நிபந்தனை வரம்புகளுக்கு உட்பட்டவனாகவோ வாழ எனக்கு விருப்பமில்லை… துணிச்சலோடும் புன்னகையோடும் நான் தூக்குமேடை ஏறினால், அது இந்தியத் தாய்மார்களின் உணர்வுகளைத் தூண்டும். தங்களது பிள்ளைகளும் பகத்சிங்கைப் போல் ஆக வேண்டுமென்று அவர்கள் விரும்புவார்கள். இதன் மூலம் நாட்டின் விடுதலைக்காக தங்களது உயிர்களையும் தியாகம் செய்யச் சித்தமாயிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதன் பிறகு, புரட்சிப் பேரலையை எதிர்கொள்வதற்கு ஏகாதிபத்தியத்தால் முடியாமல் போகும்".
*====>"புரட்சிகள் கட்டளைப்படி நடப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட தருணத்தையொட்டி நடப்பதுமில்லை. அவை வரலாற்றுப் போக்கில் முதிர்ச்சியடைகின்றன. பல்வேறு உள்நாட்டு, அயல்நாட்டு காரணங்களைப் பொறுத்து உரிய நேரத்தில் வெடிக்கின்றன" என்கிறார் லெனின்.
*====> மார்க்சியத்தைப் பொருத்தவரை புரட்சி பல வகைப்படும். சமூகப் புரட்சி, சோசலிசப் புரட்சி, தேசிய விடுதலைப் புரட்சி, பாட்டாளிப் புரட்சி, பாட்டாளிய சனநாயகப் புரட்சி மற்றும் மக்கள் சனநாயகப் புரட்சி. ஒவ்வொன்றுக்கும் தெளிவான வரையறை இருக்கிறது. ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு தத்துவம் இருக்கிறது.
*====> தந்தை பெரியாரிடம் புரட்சி என்றால் என்ன? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில் இது. "வெறுங்காலோடு நடந்து செல்பவன் செருப்பணிந்து சென்றால் அது புரட்சி!".
அடிப்படை மாற்றம் என்பதன் சமூக அறிவியல் பெயரே "புரட்சி". போராடுகிறவன் போராளி. போராளிகளை உருவாக்குபவன் புரட்சியாளன். போராளிக்கு இலக்கை எட்டும் வேகமும் எதையும் செய்யத்துணியும் துணிச்சலும் தேவை. புரட்சியாளனுக்கு காலப்புரிதலும் வழிநடத்தலும் தேவை.
நான் படித்து தெரிந்த புரட்சியைவிடவும் நான் பார்த்து தெரிந்த புரட்சி என்னை மெய்சிலிர்க்க வைத்தது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக அந்த மண்ணின் மக்கள் தன்னெழுச்சியாக கூடி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தெருவுக்கு வந்து போராடிக் கொண்டிருப்பது உண்மையில் மிகப்பெரும் மக்கள் புரட்சியாகப் பார்க்கிறேன்.
தமிழ்மண்ணில் மாணவர்கள் புரட்சியின் ஊன்றுகோலாக இருந்து வந்திருப்பது வரலாற்றின் உண்மை. மொழிப்போர் காலகட்டத்திலும் சரி அதன் பின் தற்போது ஏற்பட்ட "தனி ஈழக்" கோரிக்கை போராட்டத்திலும் சரி மானமுள்ள தமிழ்ச்சாதி வீறுகொண்டு எழுந்தது காலத்தின் கட்டாயம். இது தான் புரட்சி!
ஐந்நூறு பேர் வாழ்கின்ற ஊரில் ஐந்து பேர்கள் போராடினால் அது போராட்டம்(ஆர்ப்பாட்டம்). குறைந்தது முந்நூறு பேர்கள் போராட வந்தால் அது தான் புரட்சி!.
சீர்திருத்தத்திற்கும் புரட்சிக்கும் வேறுபாடுண்டு. ஒரு செயலின் சீரான தன்மையைத் திருத்துவது, சீர்திருத்தம். அந்த செயலையே அடிப்படையாய் மாற்றிச் செய்வது, புரட்சி! பழுதடைந்த கட்டடத்தைப் பழுதுபார்ப்பது, சீர்திருத்தம். பழுதடைந்த கட்டடத்தையே இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டுவது, புரட்சி!
ஒரு செம்மையான கருத்து ஒரே நேரங்களில், பலர் மனங்களில் விதைக்கப்படுவது கூட புரட்சியாகத் தான் கருதப்படும். அதை கருத்தியல் புரட்சி என்றழைக்கலாம். களத்தில் புரட்சி ஏற்படும் முன் கருத்தியல் புரட்சி ஏற்படவேண்டும்.
ஒரு வேளை உணவுக்குக் கூட வழியில்லாத வறுமையுள்ள நாட்டில் ஒரு கூட்டம் கேளிக்கைக்கு கோடி கோடியாய் கொட்டி செலவழிக்கிறதென்றால் அதை கேட்க வக்கில்லாது வாய் பொத்தி போனால் அது கோழைத்தனமன்றோ? ஏழையாக வாழ்பவன் உண்மையில் கோழையே!
முதலாளித்துவத்தைத் தகர்க்கத் தெரியாதவன் ஏழையாக வாழ்வது கோழைத்தனம் தானே? ஒரு சிலர் பொருளாதாரத்தைக் குவிப்பது என்பது பொருளாதாரச் சுரண்டலே ஒழிய, அதை பொருளியல் திறமை என்று மெச்சிக்கொள்ள முடியாது. சரி! இதுபற்றி நாம் இன்னொரு பதிவில் காணலாம். புரட்சியின் சிந்தனைகளை உள்வாங்கி, உள்வாங்கிய சிந்தனைகளை ஆய்வு செய்து, ஆய்வு செய்த சிந்தனைகளை அறியாதாரிடத்தில் பரப்புரை செய்து களத்தைத் தேர்ந்தெடுப்போம்!!! அனைவருக்கும் புரட்சி வணக்கங்கள்...!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக