புதன், 29 மே, 2013

தமிழ்ப்பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுங்கள்...

                                                         தமிழ்ப்பிள்ளைகளுக்கு தமிழ்ப்பெயர் சூட்டுங்கள் என்று தமிழ்த்தேசியவாதிகள் சொல்லும்போதெல்லாம் அதை ஏளனமாகப் பார்க்கும் அறிவுக்கொழுந்துகளே! உங்கள் பிள்ளைகளுக்கு வடமொழிச்சொற்களில் பெயர்வைக்கிறீர்களே, அதன் பொருள் தெரிந்துதான் செய்கிறீர்களா? இல்லையே! சிலர் சொல்லலாம், நான் இணையத்தில் பார்த்துதான் பிள்ளைக்குப் பெயர் சூட்டினேன் என்று. அது உண்மைதான் என்று நீங்கள் ஆராய்ந்ததுண்டா? அதில் எந்தபிழையும் இல்லை என்று உங்களால் கண்டிப்பாக சொல்லமுடியுமா?
                                                              மகிசன்,மகிசா என்று பெயர் வைக்கின்றனர். இது உச்சரிப்புக்கு "அழகாக" இருக்கிறதோ? இல்லை, இணையத்தில் சரியான பொருள் பார்த்துதான் பெயர்வைத்து உள்ளனரோ? இருக்கலாம் என்றால் அப்பெயர்களின் பொருளைப் பார்த்துவிடுவோமா?
                                                              மகிசன், மகிசா என்றால் எருமை என்று பொருள். தாம் பெற்ற பிள்ளைகளுக்கு எருமை மாடு என்றா பெயர்வைப்பீர்கள்? அடக்கொடுமையே!
இன்னொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போமா?
                                                                  பல பெண்பிள்ளைகளுக்கு "ஆர்த்தி" என்று பெயர்வைத்துள்ளனர். இதன் பொருளாக பலரும் எண்ணிக்கொண்டும் சொல்லிக்கொண்டும் இருப்பது "ஆர்த்தி என்றால் ஆரத்தி என்று". ஆனால் அது தவறு. ஆரத்திக்கும் ஆர்த்திக்கும் வேறுபாடுண்டு.
                                                                  ஆர்த்தி என்றால் சமக்கிருத்தத்தில் "அவலட்சணம்" என்று பொருள். தமிழில் சொல்வதாய் இருந்தால் "அழகற்ற பெண்" என்று பொருள். தாம் பெற்ற பிள்ளையை அழகற்றவள் என்று சொல்வதே சரியில்லாத ஒன்று. ஆனால் அதை அந்த குழந்தைக்கு பெயராகவே வைத்தும் இழிவுபடுத்துவது எவ்வளவு பெரிய கொடுமை...???
                                                                      இது மட்டுமா தோழர்களே, இதை விடவும் ஒரு மிகப்பெரும் தவற்றை செய்துவந்துள்ளனர், செய்துவருகின்றனர்...
                                                                        "லிங்கம்" என்ற பெயர் சிற்றூர்களில் பரவலாக பெயர்சூட்டுவதில் பயன்படுத்தப்படுகிறது. லிங்கம் என்றால் என்ன பொருள் என்று தெரியாமல் யாரும் ஊரில் பெயர்சூட்டுவதில்லை. அதை கடவுள் பெயர் என்று நினைத்துதான் சூட்டுகின்றனர். அவர்கள் குறிப்பிடுகின்ற கடவுளே ஆபாசமான சொற்களாலும் கதைகளாலும் தான் சொல்லப்பட்டுள்ளது.சரி இதை பற்றி நாம் பின்பு பார்ப்போம்இப்போது லிங்கம் என்றால் என்ன பொருள்? "ஆண் அந்தரங்க உறுப்பு" தான் சமக்கிருதத்தில் "லிங்கம்" என்று சொல்லப்படுகின்றது. தாம் பெற்ற பிள்ளைக்கு "ஆண்குறி" என்றா பெயர்வைப்பர்? ஊரே அவனை அப்படித்தானே சொல்லி அழைக்கும்? இது அசிங்கமான செயல் இல்லையா? அதிலும் ஒரு சிலர் ஒருபடிமேலே போய்
"மகாலிங்கம்" என்று பெயர்வைக்கின்றனர்... மகா என்றால் "பெரிய" என்று பொருள். கொடுமையடா தமிழா! பெற்ற பிள்ளையைப் "பெரிய சு***" என்றா அழைப்பது? இன்னும் சிலர் "சுந்தரலிங்கம், சுந்தரமகாலிங்கம்" என்றும் பெயர் வைக்கின்றனர். "அழகான பெரிய சு***"...??? இப்படித்தான் பெயர் இருக்கவேண்டும்... கேவலமடா கேவலம்...!!!
                                                                 இந்த இழிவுகளை எல்லாம் ஏன் செய்யவேண்டும்? உங்கள் மொழி தாய்மொழி தமிழில் நல்ல பெயரே இல்லையோ? தாயை மதிக்காமல், திரையில் அம்மணமாக ஆட்டம்போடும் நடிகைகளுக்கு பிறந்தநாள் கொண்டாடும் கூட்டம்தானே நீங்கள்? உங்களுக்கு தாய்மொழியில் பெயர்வைக்க தயக்கமாகத்தான் இருக்கும். அப்படி தயங்கும் எவனிடமும் யாம் கெஞ்சவேண்டிய அவசியமில்லை. நீ எக்கேடும் கெட்டுப் போ...!!! ஆனால் ஒன்று, நாளை உன் பிள்ளைக்கு அவன்/அவள் பெயரின் உண்மைப் பொருள் தெரியத்தான் போகிறது. அப்போது அவர்கள் உங்களைச் செருப்பால் அடிக்கத் துரத்துவார்கள்...! ஜாக்கிரதை! நீ வாங்கித் தரும் செருப்பாகக் கூட இருக்கலாம்...!!!! என் சொற்கள் அதிகமாய் கோபத்தை வெளிப்படுத்தும். இப்படியெல்லாம் எம் இனத்தில், மொழியில் நிகழும் இன்னல்களை, இழிவுகளை வெட்டி வீழ்த்த வேண்டிய கடமை எமக்கு அதிகமாகவே இருப்பதாக உணர்வதால் வேகமாக களமாடுவதன் விளைவு கோபமாகத் தான் வெளிப்படும்...! வெறுமனே கெஞ்சியும் கொஞ்சியும் கேட்டுக்கொள்ள முடியாது... இது தவறான ஒன்று என்று என்னை விமர்சனம் செய்வதை விட்டுவிட்டு தவறு செய்பவர்களைத் திருத்துங்கள்...!!!  
                     சரி! நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு தமிழில் பெயர்வையுங்கள்! உங்கள் பெயர் தமிழில் இல்லை என்றால் தமிழில் மாற்றுங்கள்! உங்களைத் தமிழர் என்று அடையாளப்படுத்தும் வழிகளில் பெயரும் ஒன்று! எவரும் உங்களிடம் அறிமுகம் ஆகும்போது முதலில் உங்கள் பெயரைத் தான் கேட்பார்கள்! சொல்லும் உங்கள் பெயர் தான் உங்களை அடையாளப்படுத்தும்! "தமிழ்த்தேசியம்" என்பது இதிலிருந்து தான் தொடங்கும்... உங்கள் பெயர்களில் தமிழ்ச்சொற்கள் தாங்கினால் நீங்களும் ஒரு தமிழ்த்தாங்கி தான்....!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக