வெள்ளி, 24 மே, 2013

நிறுத்தற்குறிகள் அறிவோம்...!!!


                       நாம் சிலவற்றை சொல்லும்போதும் எழுதும்போதும் ஆங்கிலத்தில்தான் பயன்படுத்துகிறோம். ஏன்? ஒன்று நமக்கு அதுபற்றி தெரியாமல் இருக்கும். மற்றொன்று அப்படி தாய்மொழித் தமிழில் சொல்வதற்கு பலத்த தயக்கமும் கூச்சமும் இருக்கும். தெரியாமல் இருந்தாலும் தெரிந்துகொள்ளாமல் இருப்பதன் கரணியம் என்ன? அவர்களுக்கும் அதே தயக்கம் தான் இருக்கிறது. தமது தாயை "அம்மா" என்று அழைப்பதில் என்னடா தயக்கம்? பெற்ற தாயைத்
தாய்மொழியில் அழைப்பதில் தயக்கம் என்றால் உன்னை எதை கொண்டு அடித்துக்கொள்வது? சரி! இதுபற்றி நாம் பிறகு அலசுவோம். தற்போது நாம் பயன்படுத்தும் நிறுத்தற்குறிகளைப் பற்றியும் அதுதொடர்பானவை பற்றியும் பார்க்கலாம்.

1. காற்புள்ளி (,)

2. அரைப்புள்ளி  ( ; )

3. முக்காற்புள்ளி (:)

4. முற்றுப்புள்ளி ( . )

5. வினாக்குறி (?)

6. உணர்ச்சிக்குறி (!)

7. இடையீட்டுக்குறி ( – )

8. பிறைக்குறி அல்லது அடைப்புக்குறி ( () )

9. ஒற்றை மேற்கோள்குறி (' ')

10.இரட்டை மேற்கோள்குறி (" ")

11. விழுக்காடு குறி (%)

12. விண்மீன் குறி (*)

13. வலம் சாய்க்கோடு (/)

14. இடம் சாய்க்கோடு (\)

15.கொத்துக்குறி  (#)

16. தொப்பிக்குறி  (^)

என்னால் தொகுக்க இயன்றதை இங்கே பதிவிட்டுள்ளேன். வாசிக்கும் நண்பர்களுக்கு ஏதேனும் நினைவுக்கு வந்தால் அதை பின்னூட்டாமாக இடுமாறு வேண்டுகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக