ஆண்டுதோறும் மாலை போட்டு பெருந்திரளாக ஒரு கூட்டம் சபரிமலைக்கு போய் வரும். அதில் ஆண்டுதோறும் சில விபத்துகளும் நடக்கும். நாற்பது நாள்களோ, அறுபது நாள்களோ நோன்பிருந்து, தன்னை மனதார நினைத்து காண வருகின்ற பக்தர்களைக்கூட பாதுகாப்பாக பார்த்துக்கொள்ள முடியாத கடவுள் உண்மையில் இருக்கிறானா இல்லையா என்று மாலை போட்டுச் செல்லும் எவனும் சிந்தித்ததேயில்லை! அடிப்படை அறிவு கூட இல்லாத மாக்களாகவே இந்த மக்கள் வாழ்ந்து தொலைக்கின்றனர். ஒரு நாற்பது நாள்களோ அல்லது அறுபது நாள்களோ சுத்தமாக இருந்து ஒழுக்கமாக இருந்து பழகினால் நன்மை என்று சொல்லிக்கொள்வார்கள். அப்படி என்றால் ஆண்டுமுழுதும் அப்படியே சுத்தமாகவும் ஒழுக்கமாகவும் இருக்க வேண்டியதுதானே...??? மாலை போட்ட நாள்களில் மட்டும் எதுவும் செய்யாமல் மாலையைக் கழற்றிய மறுநாளே எல்லா ஒழுங்கீனச் செயல்களையும் செய்தால் அது எப்படி ஒழுக்கம் ஆகும்...??? மாலையைக் கழற்றியதும் எல்லாவற்றையும் செய்வாயென்றால் மாலை போட்டதால் ஒழுக்கமாக இருப்பதாகச் சொல்வதை எப்படி பெருமையாகக் கருதமுடியும்...??? நீ கேரளாவிலுள்ள சபரிமலை ஐயப்பனைத் தான் வழிபடுவாயென்றால் தமிழ்நாட்டிலுள்ள எல்லா கோயில்களையும் இடித்துவிடலாமா...??? ஒன்றைப் புரிந்தும் தெரிந்தும் கொள்! இங்கே கடவுள், கோயில் எல்லாம் பணம் பறிப்பதற்கான வழிகளே தவிர வேறில்லை.
சபரிமலையில் மகரசோதி என்று ஒன்றைப் பார்ப்பதற்காக கூட்டம் அலைமோதும். அது அங்குள்ள மின்வாரியத்தின் ஏமாற்றுவேலை என்றும் மக்களைக் கவருவதற்காக அரசே அந்த வேலையைச் செய்யச்சொன்னது என்றும் தகவல்கள் வந்தபின்னும் ஏமாறும் கூட்டம் அதை காதில் போட்டுக்கொண்டதாய்த் தெரியவில்லை. ஐயப்பன் எப்படி பிறந்தான்? என்று சொல்லப்பட்டிருக்கும் புராணத்தைப் படித்தால் எவனாவது ஐயப்பனை வழிபடுவானா...??? ஒரு ஆபாசமான கதையைச் சொல்லி அதை கடவுள் என்றும் சொல்லி அதை நம்பி வழிபடவும் சொல்லிவைத்துள்ளனரே, இதை எங்கே கொண்டு போய்ச் சொல்வது...??? இந்த அய்யப்பன் பற்றிய புராணக் கதைதான் என்ன?
பத்மாசூரன் என்பவன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து ஒரு வரம் வேண்டினான். சிவனும் முன்யோசனையின்றி கேட்ட வரத்தைத் தருவதாக வாக்களித்தான். நான் யார் தலையில் கை வைத்தாலும் அவன் தலை எரிந்து விடவேண்டும் என்று வேண்டினான். சிவனும் அவ்வாறே வரம் அளித்தான்.
வரத்தைப் பெற்ற பத்மாசூரன் சிவன் தலையிலேயே கையை வைத்துச் சோதனை செய்து பார்க்க முயன்றான். சிவன் தப்பித்து ஓட, பத்மாசூரன் விரட்டிக் கொண்டு போனான்.
இந்த நிலையில், தனது மைத்துனன் சிவனுக்கு மோசம் விளைந்ததே எனக் கருதி, அதிலிருந்து அவனைக் காப்பாற்ற வேண்டி, திருமால் மோகினி உருவெடுத்து எதிரே வந்தான்.
பத்மாசூரன் மதிமயங்கி மோகினியிடம் (திருமால்) நெருங்கினான். இப்படி வந்தால் இணங்கமாட்டேன். குளித்துச் சுத்தமாக வர வேண்டும் என்று மோகினி கூற, குளிக்கச் சென்று தன் தலையைத் தன் கையால் அவன் தேய்த்தபோது, பத்மாசூரன் தலை எரிந்து சாம்பலாகிவிடுகிறான்.
பிறகு ஒளிந்திருந்த சிவனை, திருமால் அழைத்து நடந்ததைக் கூறினான். சிவனுக்குச் சபலம் ஏற்பட்டு காமவெறி உச்சத்தை அடைந்தது!
மீண்டும் திருமால் மோகினியானான்! அவனோடு கூடும் முன்பே, இந்திரியம் வழிந்தது. கையிலே பிடித்தான். கையிலேயே பிள்ளை பிறந்தது. அதை கையப்பன் என்று சொல்லி பிறகு அய்யப்பன் ஆகி மருவியது!
அரி (திருமால்), கரன் (சிவன்) இருவருக்கும் பிள்ளை பிறந்ததால் அரிகரன் திருமாலுக்கும், சிவனுக்கும் பிறந்த பிள்ளை என்ற பொருள் வந்ததாம்!
எவ்வளவு ஆபாசம்! மடமை!!!ஆணுக்கும் ஆணுக்கும் பிள்ளை பிறக்குமா? இது கடவுள் கதையா? இதைவிட ஒழுக்கக்கேடு வேறு உண்டா? இதேபோல நிறைய உண்டு புராணக் கதைகள். இந்த புராணங்களில் எந்த கடவுளாவது உருப்படியா அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பிறந்திருக்கிறதென்று எழுதியிருக்குதா...??? எல்லாம் ஆபாசம்...!!! இதை படித்து தெரிந்தபின்னும் நமது வீட்டு பெண்பிள்ளைகளையோ, குழந்தைகளையோ எப்படி தெய்வ வழிபாட்டுக்கு இசைவது...??? இதையெல்லாம் பல்லாயிரம் ஆண்டுகளாக எமது மக்கள் அறிவின்றி பின்பற்றி வருகின்றனரே...!!! எப்படி ஒழிப்பது...??? யார் ஒழிப்பது...??? படித்த இளைய பிள்ளைகள்தான் இதையெல்லாம் தத்தம் வீடுகளில் சொல்லித் தடுத்து ஒழிக்கவேண்டும்...!!! ஆனால் அவர்கள் அதை பற்றி தெரிந்துகொள்வதுகூடக் கிடையாது. கட்டாயம் ஒவ்வொரு படித்த பிள்ளைகளும் பகுத்தறிவு பரப்புரையில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். ஏன் என்றால், பலநூறு ஆண்டுகளாய்த் தங்கிக்கிடக்கும் கள்ளிச்செடிகள்தான் இந்த மூடநம்பிக்கைகள்! அதை அறுத்தெறியவல்ல கருவிகள்தான் இளைய பிள்ளைகள்! இனி சபரிமலைக்குச் செல்லப்போகும் உற்றார், உறவினரிடத்தில் சென்று அதை பற்றிய கேள்விகளைக் கேட்டு அவர்களின் மூடநம்பிக்கைகளைக் களைந்தெறிய வேண்டும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக