பிள்ளைகளுக்குப்
பெயர் சூட்டுவதில் தூய தமிழ்ப்பெயர்கள் என்றால் பலருக்கு ஒவ்வாமையாக உள்ளது. அது
ஏனென்று தெரியவில்லை. உலகில் மொழி தோன்றி இரண்டு இலட்சம் ஆண்டுகளுக்கு மேல்
ஆகிறது. எம் தாய்மொழி தமிழ் தோன்றி ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது.
தமிழுக்கு முன் தோன்றிய மொழிகள் எல்லாம் எழுத்துவடிவம் இல்லாது காலப்போக்கில்
அழிந்தும் போய்விட்டன. ஆனால், பல அந்நியர்களின் படையெடுப்பிற்கு பின்னும் ஆட்சிக்கு
பின்னும் எம் தாய்மொழி தமிழ் இன்னும் உயிர்த்து வாழ்கிறது. மிக நீண்ட நெடிய
வரலாற்றுப் பெருமைமிக்க மொழி வாசிப்பிற்கு பழைமையாகத் தான் தோன்றும். பெற்ற தாய்
பழைமையாக, வயதாகத்
தோன்றுகிறாள் என்பதற்காக அவளை ஒதுக்கிவைப்பது சரியா? தமிழரே தமது தாய்மொழியைத் தள்ளிவைத்தால் எப்படி? என்ற கேள்வி
எல்லாத் தமிழர் நெஞ்சிலும் எழவேண்டும். என் சிந்தையில் தோன்றிய சில
தமிழ்ப்பெயர்களை இங்கே பதிவிட்டுள்ளேன்.
__________________________________________________________________
1)தமிழ்ப்புகழேந்தி
இளநிலவன்
2)சமர்ப்புலி வீரன்
3)எழிலன் எல்லாளன்
4)தீந்தமிழ்த்தீரன்
5)வாஞ்சைகொள்
வந்தியத்தேவன்
6)விழி எழிலாள்
7)கவின்மிகு
கயல்விழி
8)நிலவுமொழி
அன்பரசி
9)திங்கள்முக
தங்கவிழி
10)மயிலரசி மகிழினி
11)பைந்தமிழ்ச்
செந்தளிர்
12)தமிழிளநிலா
13)தேனினித்தென்னரசி
14)புன்னகைப்
பூங்கோதை
15)ஆற்றல் செழியன்
16)அன்புத்தமிழ்
மொழியன்
17)விடுதலை அரசன்
18)செந்தமிழ்ச்
சோழன்
19)பாண்டியத் தேவன்
20)பாண்டியச் சோழன்
21)இனிய இளங்கோவன்
22)மறத்தமிழ்
வேந்தன்
23)கதிரவன் கவியரசன்
24)இயல்
25)இசை
26)இயலிசை
27)பூந்தளிர்
புகழ்ச்செல்வி
28)அமுதமொழி
அனிச்சயா
29)கதிர் ஓவியா
30)நறுமுகை நந்தினி
_______________________________________________________________________
அனிச்சயா
பதிலளிநீக்கு