புதன், 26 ஜூன், 2013

:::உணவுகளின் தமிழ்ப்பெயர்கள்:::


                 எனது முகநூல் பக்கத்தில் நண்பர் இளஞ்சித்திரன் வெளியிட்ட ஒரு தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அதிலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழாக பேச விரும்பும் எனக்கு அமுதம்போல் கிட்டியது. யாம் பெற்ற இன்பத்தை யாவரும் துய்க்கவேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே பதிவிடுகிறேன்...!!! 

                 நான் கடைகளில் சென்று பொருள்கள் வாங்கும் போது தனித்தமிழில் பொருள்களின் பெயரைச் சொல்லி வாங்குவதுண்டு. பெயர் தெரியாதெனினும் நானாகவே ஒரு பெயர் வைத்துக்கொள்வேன். ஏனெனில் தவறாகச் சொன்னாலும் அதை எம் தமிழிலேயே சொல்லவேண்டும் என்ற செருக்கு தான். இருந்தாலும் சிலவற்றிற்கு பெயர் தெரியாமல், என்னால் எவ்வளவு முயன்றும் பெயரைத் தேர்ந்தெடுக்க இயலாமல் கடைக்காரரிடம் "அதை கொடுங்கள்", "இதை கொடுங்கள்" என்று கேட்டு வாங்கி வந்ததுமுண்டு. ஆனால் இனிமேல் நான் அப்படி சொல்லத்தேவையில்லை. இதோ அந்த பதிவு:::::::
---------------------------------------------------------------------------------------------------------------------------------
டீ  - தேநீர்

காப்பி  - குளம்பி

சப்பாத்தி - கோந்தடை

புரோட்டா - புரியடை

நூடுல்ஸ் - குழைமா

கிச்சடி - காய்சோறு, காய்மா

கேக் - கட்டிகை, கடினி

சமோசா - கறிப்பொதி, முறுகி

பாயசம் - பாற்கன்னல்

சாம்பார் - பருப்பு குழம்பு, மென்குழம்பு

பஜ்ஜி - தோய்ச்சி, மாவேச்சி

பொறை - வறக்கை

கேசரி - செழும்பம், பழும்பம்

குருமா - கூட்டாளம்

ஐஸ்கிரீம் - பனிக்குழைவு, பனிப்பாலேடு

சோடா - காலகம்

ஜாங்கிரி - முறுக்கினி

ரோஸ்மில்க் - முளரிப்பால்

சட்னி - அரைப்பம், துவையல்

கூல்ட்ரிங்க்ஸ் - குளிர் குடிப்பு,குளிர் பானம்

பிஸ்கட் - ஈரட்டி, மாச்சில்

போண்டா - உழுந்தை

ஸர்பத் - நறுமட்டு

சோமாஸ் - பிறைமடி

பப்ஸ் - புடைச்சி

பன் - மெதுவன்

ரோஸ்டு - முறுவல்

லட்டு - கோளினி

புரூட் சாலட் - பழக்கூட்டு

பேக்கரி -  வெதுப்பகம்



                   இந்த பதிவு உணவுப்பிரியர்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறேன். உங்களுக்குத் தெரிந்த உணவுகளின் தமிழ்ப்பெயர்கள் இருந்தால் பதிவிடவும். உண்ணும்போதும் உறங்கும்போதும் எண்ணும்போதும் எழுதும்போதும் தமிழே இருக்கட்டும்!!! அது தனியே இருக்கட்டும்!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக