புதன், 26 ஜூன், 2013

உண்மையை உரக்கச் சொல்வோம் இந்த உலகினுக்கு....::::

தமிழா! நீ சில நூல்களைப் படித்திருப்பாய். அவைகளில் சில வரிகள் உனக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கலாம். அதை நீ மறுபடியொருமுறை வாசித்துப் பார்த்து மனத்தில் சுவைத்திருக்கலாம். அவற்றினை நீ குறிப்பெடுக்கத் தவறியிருக்கலாம். நான் படித்த சில நூல்களில் என் தாய்மொழியைப் பற்றியும் என் இனமாம் தமிழர் பற்றியும் சிலர் கூறிய‌ உண்மைக்கூற்றுகளை இங்கே பதிவிடுதல் சிறப்பென்று கருதுகிறேன். இதோ எழுதுகிறேன், என்னுள்ளம்போல் உன்னுள்ளமும் உவகை கொள்ளுமென்ற நம்பிக்கையில்...!!!

கவிஞர் கண்ணதாசன்:

பாண்டியரின் வழி நீயா? இமயக் கோட்டில்
        பறந்திருந்த துன்கொடியா? இலங்கை நாட்டை
ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்க மண்ணை
        அதிரடித்த துன்குலமா? கடல்கள் மூன்றைத்
தாண்டியவர்கள் பரம்பரையா? புட்பகத்தில்
        சாவகத்தில் கொடிபோட்டான் பிள்ளையா நீ?
ஆண்ட வரலாற்றிற்கும் உன்றனுக்கும்
        அணுவளவும் தொடர்பில்லை எதற்கு வார்த்தை?
                        
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

இராமச்சந்திர தீட்சிதர்:

உலகம் தோன்றிய காலத்தில் குழம்பாக இருந்த மண், முதலில் குளிர்ந்து அமைந்த நிலப்பகுதி தமிழர் வாழும் தென்பகுதியே ஆகும். இங்குதான் மனிதன் முதன்முதலில் தோன்றியிருக்கக் கூடும்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

பேராசியர். பெத்தூர்க்கோர் தலைமையில் இரசிய ஆய்வுக்குழு அறிக்கையில்:

கடல் விழுங்கிய இலெமூரியாக் கண்டமே மனித இனத்தின் தொட்டில். அதன் மொழி, தமிழ்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ரிக் வேதம்:

தமிழ்நாடு பெரிய கண்டம். பர்மா, தென்சீனா, தென்னாப்பிரிக்கா, இமயம், ஆத்திரேலியா வரை பரவி இருந்தது.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

கிராசு பாதிரியார்:

மொகஞ்சோதரா மக்களின் மொழி, தமிழ்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மக்சுமுல்லர்:

தமிழே மிகவும் பண்பட்ட மொழி. தனக்கே உரிய வளம் வாய்ந்த இலக்கியச் செல்வங்களைப் பெற்றிருக்கும் மொழி.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

ரைட்சு டேவிட்சு:

வடமொழி, எபிரேயம்(Hebrew), கிரேக்கம் போன்ற இலக்கிய மொழிகளில் தமிழ்ச்சொற்கள் கலந்துள்ளன.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மொழியறிஞர் காலின் மாசிகா:

தென்னாசியாவில் மிகப்பழங்காலத்தில் ஒரு பொதுவான மூதாதைமொழி இருந்துள்ளது. அதுவே தொல்தமிழ்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

எகிப்து நாட்டு தாலமி,(கி.பி.119 இல்) தனது பூகோள நூலில்:

தமிழர் நாகரிகமே உலகில் சிறந்த நாகரிகம். தமிழர்கள் வடநாட்டு சந்திரகுப்தர் காலத்திலேயே கிரேக்க மன்னர்களோடு கடல் வாணிபம் செய்தனர்.முசிறி, தொண்டி போன்ற துறைமுகங்களில் நேரில் கண்டறிந்தேன்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

பிளினி என்ற பயணி (கி.பி.79 இல்):

சங்கத்தமிழ் நூல்களுக்கு இணையான நூல்களை நான் வேறு எந்த நாட்டிலும் வேறு எந்த மொழியிலும் கண்டதில்லை.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

லாசு ஏஞ்சல்சு டைம் என்ற செய்தித்தாளில் எட்வர்டு லான்சர் குறிப்பிட்டது(மே 22,1932):

மறைந்த இலெமூரியாக் கண்டத்தின் கடைசி மக்கள் தமிழர்களே!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

சீனப்பயணி யுவான் சுவாங் (கி.பி.645 இல்):

தமிழ்த்துறைமுகங்களில் ரோம் நாட்டு நாணயங்கள் புழக்கத்தில் இருந்தன.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

அண்டர் (Hunter) எழுதிய இந்தியா என்ற நூலில்:

தொலைநாடுகளில் எல்லாம் அன்று பேசப்பட்ட மொழி தமிழே!

-----------------------------------------------------------------------------------------------------------------------------------

நல்லூர் சுவாமி ஞானப் பாத தாசர்:

இந்தோ ஐரோப்பிய மொழிகளின் தந்தையாகிய தொன்மொழிகளின் தோற்றத்திற்கானச் சான்றுகள் தமிழில் தான் கிட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக