திங்கள், 24 ஜூன், 2013

தெரிந்துகொள்வோம்:::::(இரண்டு)


நாம் பேசும்போது எவை எவை தமிழ்ச்சொற்கள் என்றே தெரியாமல்தான் பேசுகிறோம். வேற்றுமொழிச் சொற்கள் கலப்பில்லாமல் தனித்தமிழில் பேசுவதற்கு நாம் பேச முனையும்முன் மொழிச்சொற்கள் பற்றிய அறிவு நமக்கு தேவையாகிறது. இந்த பதிவில் தமிழ் என்று நாம் கருதிய சில வடமொழிச்சொற்களை அடையாளங்கண்டு அதற்கு இணையான தமிழ்ச்சொற்களை தெரியபடுத்தியுள்ளேன். ஆங்கிலம் மட்டும்தான் வேற்றுமொழி அன்று, தமிழில்லாத எந்த மொழியும் வேற்றுமொழிதான். நான் வேற்றுமொழியை வெறுக்கச் சொல்லவில்லை. தாய்மொழி பேசும்போது வேற்றுமொழிச்சொற்களை மறுக்கவே சொல்கிறேன். அதற்கு இந்த பதிவு ஏதுவாக இருக்குமென்று உளமாக நம்புகிறேன்.


 வடசொல்      - தமிழ்ச்சொல்

அகங்காரம்     -   செருக்கு
அகதி          -   ஆதரவற்றவர்
அகிம்சை      -    ஊறு செய்யாமை
அங்கத்தினர்    -   உறுப்பினர்
அங்கீகாரம்     -   ஒப்புதல்
அசுத்தம்       -   துப்புரவின்மை
அதிகாரி       -   உயர் அலுவலர்
அர்ச்சணை - மலரிட்டு ஓதுதல்
அநீதி         -   முறையற்றது
அபயம்       -    அடைக்கலம்
அபிவிருத்தி   -   பெருவளர்ச்சி
அபிஷேகம்    -   திருமுழுக்கு
அபிப்பிராயம்  -   உட்கருத்து
அனுபவம் பட்டறிவு
ஆசிர்வாதம்  -   வாழ்த்து
சாதம்  -     சோறு
சுத்தம் -   துப்புரவு
காரியம்  - செயல்
காரியம் என்ற வடசொல்லுக்கு நிகரான தமிழ்ச்சொல் 'செயல்'.
காரியாலயம்       - செயலகம்.
காரியதரிசி        - செயலர், செயலாளர்.
ஞாபகம்  நினைவு
இலட்சணம் - அழகு
அனுக்கிரகம்          - அருள் செய்தல்
ஆராதனை            - வழிபாடு
உற்சவம்             - விழா
கும்பாபிஷேகம்       - குடமுழுக்கு
கோத்திரம்            - குடி
சந்தியாவந்தனம்      - வேளை வழிபாடு
சரணம்              - அடைக்கலம்
சிவமதம்            - சிவநெறி
பஜனை              - கூட்டுப்பாடல் வழிபாடு
பிரசாதம்            - திருப்பொருள்
பிரகாரம்            - திருச்சுற்று
(அங்கப்) பிரதட்சனம்  - வலம் வருதல்
பிரார்த்தனை        - நேர்த்திக்கடன்
மந்திரம்            - மறைமொழி
மார்க்கம்          - நெறி, வழி
விக்கிரகம்         - திருவுருவம்
யாத்திரை         - திருச்செலவு.
க்ஷேத்திரங்கள்     - திருப்பதிகள்
அபூர்வம்        - அருமை
அவகாசம்       - ஓய்வு
அவசரம்        - விரைவு
அவசியம்       - தேவை
அவயவம்       - உறுப்பு
ஆகாயம்        - வானம்
ஆபத்து         - துன்பம்
ஆன்மா          - உயிர்
இராகம்          - பண்
இரத்தம்         - குருதி
இலக்கம்         - எண்
உபத்திரவம்      - வேதனை
ஐக்கியம்         - ஒற்றுமை
கஷ்டம          - தொல்லை
கல்யாணம்       - திருமணம்
கிரயம்          - விலை
குதூகலம்       - எக்களிப்பு
கோஷ்டி        - குழாம்
சக்தி           - ஆற்றல்
சகஜம்         - வழக்கம்
சக்கரவர்த்தி    - பேரரசன்
சந்தேகம்      - ஐயம்
சபதம்         - சூள்
சந்தோஷம்    - மகிழ்ச்சி
சமீபம்        - அண்மை
சச்சிதானந்தம் - மெய்யறிவின்பம்
சத்தியாக்கிரகம் - அறப்போராட்டம்
சந்ததி        - வழித்தோன்றல்
சிகிச்சை      - மருத்துவமுறை
சந்தர்ப்பம்    - வாய்ப்பு
சம்பிரதாயம்  - தொன்மரபு
சாபம்        - கெடுமொழி
சாதாரண     - எளிதான
சாட்சி        - சான்று
சிங்காசனம்   - அரியணை
சிநேகம்      - நட்பு
சீதோஷ்ணம் - தட்பவெப்பம்
சுதந்திரம்    - விடுதலை
சுயராஜ்யம்  - தன்னாட்சி
சுபாவம்     - இயல்பு
சேவ        - தொண்டு
சேஷ்டை    - குறும்பு
சௌகரியம்  - வசதி
தற்காலிக வேலை - நிலையிலா வேலை
தாகம்            - வேட்கை
தேதி             - நாள்
திருப்தி           - உள நிறைவு
நஷ்டம          - இழப்பு
நிபுணர்          - வல்லுநர்
நியாயஸ்தலம   - வழக்கு மன்றம்
நீதி             - நன்னெறி
பகிரங்கம்        - வெளிப்படை
பரிகாசம்         - நகையாடல்
பத்தினி          - கற்பணங்கு
பத்திரிக்கை      - இதழ்
பரீட்சை         - தேர்வு
பந்துக்கள்        - உறவினர்கள்
பாரம்           - சுமை
பாஷை         - மொழி
பிரசாரம்        - பரப்புவேலை, பரப்புரை
பூர்வம்          - முந்திய
மரணம்         - சாவு, இறப்பு
மாமிசம்        - இறைச்சி
மிருகம்         - விலங்கு
முகூர்த்தம்     - நல்வேளை
மோசம        - கேடு
யந்திரம்        - பொறி
யாகம்         - வேள்வி
யுத்தம்         - போர்
ரகசியம்        - மறைபொருள், குட்டு, பூடகம்
ருசி            - சுவை
லாபம்          - மிகை ஊதியம்
வருஷம்        - ஆண்டு
வாகனம்        - ஊர்தி
வாதம்          - சொற்போர், சொல்லாடல்
வாந்தி பேதி     - கக்கல் கழிச்சல்
வாலிபர்         - இளைஞர்
விஷயம்        - பொருள், செய்தி
விபத்து         - துன்ப நிகழ்ச்சி
விவாகம்        - திருமணம்
வீரம்           - மறம்
வேகம்         - விரைவு
ஜனங்கள்       - மக்கள்
ஜயம்          - வெற்றி
ஜாக்கிரதையாக - விழிப்பாக
ஜென்மம்       - பிறவி
ஸ்தாபனம்      - நிலையம், அமைப்பு


இவற்றில் சில வடசொற்கள் விடுபட்டிருக்கலாம். விடுபட்டவைகளைத் தேடிப்பிடித்து அடுத்த பதிவில் விடுகிறேன். இப்போது அரேபிய, பாரசீக சொற்கள் பற்றியும் நாம் அறிவது தேவையான ஒன்று. ஏனெனில் நாம் அரேபிய பாரசீக சொற்களையும் நமது பேச்சில் பயன்படுத்திக்கொண்டு அதனை செந்தமிழ் என்று ஏமாந்துகொண்டு இருக்கிறோம்.

அந்தஸ்த் - நிலைமை
அலாதி  -     தனி
ஆஜர்    -    வருகை
இஸ்திரிப் பெட்டி   -   துணி மடிப்புக் கருவி
இனாம் - நன் கொடை
கறார் விலை  -  ஒரே விலை
கஜானா     -   கருவூலம்
கம்மி    -     குறைவு
காலி -     நிரப்பப்படாமல் உள்ள நிலை, வெற்று
காலிப்பயல்  -  போக்கிலி
கிஸ்தி  -  வரி
கைதி  - சிறையாளி
சரகம்   -  எல்லை (சரகம் என்ற வார்த்தை வனச்'சரகம்' என்பதில் வருவதுண்டு)
சர்க்கார்   -    அரசு
சந்தா    -  கட்டணம்
சவால்  - அறைகூவல்
சாமான்   -  பண்டம்
சிபாரிசு   -  பரிந்துரை
சிப்பந்தி  -   வேலையாள்
சுமார்  - ஏறக்குறைய
ஜமீன்   -  நிலம்
ஜமீன்தார் -  நிலக்கிழார்
ஜாஸ்தி -   மிகுதி
ஜோடி  -  இணை
அசல் - மூலப்பொருள்
பாக்கி - நிலுவை
ஜாக்கிரதை - கவனம்
தபால் - அஞ்சல்
பஞ்சாயத் - ஐவர் குழு
பட்டுவாடா - பகிர்ந்தளித்தல்
படுதா - திரச்சீலை
பந்தோபஸ்து - திட்டபடுத்திய ஒழுங்கு
பல்லாக்கு - சிவிகை
பஜாரி - வாயாடி
பதில் - மறுமொழி
பாத் - சோறு
பகாளாபாத் - தயிர்சோறு
பூரா - முழுதும்
பேஷ் - மிக நன்று
மஹால் - அரண்மனை
மாகாணம் - மாநிலம்
மாஜி - முன்னைய
முகாம் - தங்குமிடம்
முலாம் - மேற்பூச்சு
மைதானம் - திடல்
ரத்து - விலக்கு
லாயக்கு - தகுதி
வகையறா - முதலான
வாரிசு - உரியவர்
ஷோக் - பகட்டு
இலாகா - துறை
உஷார் - விழித்திரு
உருமால் - தலைப்பாகை
கசாபு - இறைச்சி
குஷி - மகிழ்ச்சி
சபாஷ் - பலே, சிறப்பு
சொக்கா - உடை
ஜமக்காளம் - விறிப்பு
ஜல்தி - விரைவு
ஜவ்வாது - வாசனைப்பொருள்
ஜிமிக்கி - தொங்கட்டான்
ஜில்லா - மாவட்டம்
தகரார் - சண்டை
தமாஷ் - நகைச்சுவை
தர்பார் - அரசவை
தாலுகா- வட்டம்
பக்கா - நிறைவு
பஜார் - கடைவீதி
பைல்வான் - பலசாலி
தயார் -  ஆயத்தம், அணியம்.
நகரம் ‍ -  பேரூர்
கிராமம் -  சிற்றூர்
இவற்றிலும் சில விடுபட்டிருக்கலாம். அடுத்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். உங்களுக்கும் தெரிந்த, இந்த பதிவில் விடுபட்ட சொற்களை பதிவிடலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக